நூறடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து ஒருவர் பலி – பலர் பரிதாப நிலையில்!
Thursday, January 17th, 2019
பதுளை – லுணுகல பகுதியில் வேன் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 9 பேர் காயமடைந்து பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் லுணுகல பகுதியை சேர்ந்த 48 வயதான நபரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் லுணுகல காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
Related posts:
தொலைபேசி ஊடாகவேனும் ஆசிரியர்களை வாழ்த்துங்கள் - கல்வி அமைச்சர் கோரிக்கை!
மரண தண்டனை - இரத்து செய்வதற்கான தீர்மானம் கொண்டுவரின் அது தேசிய துக்க தினம்!
TIN இலக்கம் வழங்குவது தொடர்பான செயற்பாடுகளை இலகுபடுத்த துரித நடவடிக்கை - நிதி இராஜாங்க அமைச்சர் கலாந...
|
|
|


