யாழ். போதனா மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவு 7 ஆம் திகதி திறப்பு!
Thursday, January 17th, 2019
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 600 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட விபத்து சிகிச்சைப்பிரிவு எதிர்வரும் மாதம் 7 ஆம் திகதி சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இந்த விபத்து சிகிச்சைப் பிரிவில் 100 பேர் தங்கக்கூடிய கட்டில் வசதிகளுடன் 3 சத்திர சிகிச்சைக் கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் ஓர் அவசர சிகிச்சைக் கூடமும் இங்கே காணப்படும். இதன்மூலம் விபத்தில் காயமடையும் நோயாளர்கள் நேரடியாகவே இந்த விடுதியில் சேர்க்கப்படுவதோடு சாதாரண நோயாளர்கள் மற்றும் குணமடையும் நோயாளர்களும் நேரடியாகவே வெளியேறும் வசதிகளும் ஏற்படுத்தப்படும். எனத் தெரிவித்தார்.
Related posts:
நுரைச்சோலை அனல் மின் நிலைய மின்பிறப்பாக்கியின் திருத்தப் பணிகள் நிறைவு!
நியூசிலாந்துக்கு அருகில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு!
கைபேசிகளுக்கு மின் கட்டண பட்டியலை அனுப்புவதன் ஊடாக பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக கிராமபுற மக்...
|
|
|


