காபன் வரித் திட்டத்துக்கு கிளம்பியது பெரும் எதிர்ப்பு!
Thursday, January 17th, 2019
காபன் வரி அறவிடும் அரசின் புதிய தி;ட்டத்தை உடன் மாற்றிக்கொள்ள வேண்டும் என இலங்கைத் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளதாவது:
அரசு இதுவரையில் அறிமுகம் செய்த புதிய விடயங்களில் பெரும் பிரச்சினைகள் உள்ளன. அவற்றைப் போன்ற ஒன்றாக இந்த காபன் வரி காணப்படுகின்றது. எரிபொருள் சூத்திரம் என்று ஒன்றை அரசு அறிமுகம் செய்துள்ளது. அதில் இந்த வரியைச் சேர்த்திருக்கலாம்.
தனியாக காபன் வரி என்ற ஒன்று அவசியமற்றதாகும். வீட்டில் பயணங்களுக்குப் பயன்படுத்தாது நிறுத்தி வைத்துள்ள வாகனங்களுக்கு இந்த வரியை அறவிடுவது நியாயமான ஒன்றா? என்பதை அரசுக்கு இந்த வரி தொடர்பில் ஆலோசனை வழங்கிய அதிகாரிகள் கருத்தில் கொள்ளாதது ஏன்? – என்றார்.
Related posts:
வைத்திய கல்லூரி மூடப்படும் வரை போராட்டம் தொடரும்!
நாடா தாக்கம்: 57 குடும்பங்கள் பாதிப்பு - யாழ் அரச அதிபர்!
கிராம உத்தியோகத்தர் பணிப்புறக்கணிப்பு - தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் இடையூறு ஏற்படுமா என்ற சந்தேகம்...
|
|
|


