26 உயிர்களை பலியெடுத்த கோர விபத்து!
Saturday, July 2nd, 2016
பேருந்தின் டயர் வெடித்ததில் இடம்பெற்ற விபத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
சீனாவில் நெடுஞ்சாலை வழியாக சென்ற பேருந்தின் டயர் வெடித்து பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சீனாவின் ஹேபேய் மாகாணத்தில் உள்ள டியான்ஜிங் மற்றும் சிசியான் நகரங்களுக்கு இடையில் நேற்று பயணித்து கொண்டிருந்த வேளையிலே பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 30 பயணிகளுடன் அதிக வேகமாக வந்த அந்த பேருந்தின் டயர் திடீரென்று வெடித்துள்ளது.
இதனால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து படோய் என்ற இடத்தின் அருகே வீதியோர தடுப்பின்மீது மோதி தண்ணீர் தேங்கியிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
Related posts:
மத்திய தரைக்கடலில் தத்தளித்த 1,300 பேர் மீட்பு!
பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்!
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 28இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
|
|
|


