நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Wednesday, January 9th, 2019
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதி சபாநாயகர் தலைமையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் போது நாடாளுமன்ற குழுவுக்கான அங்கத்தவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
இந்தக்குழுவுக்கு ஜோன் அமரதுங்க, காமினி ஜெயவிக்கிரம பெரேரா, சஜித் பிரேமதாஸ, தலதா அத்துகோரளை, டக்ளஸ் தேவானந்தா, லஷ்மன் கிரியெல்ல, எஸ்.பி திஸநாயக்க, தினேஷ் குணவர்த்தன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், விஜித ஹேரத், மஹிந்த சமரசிங்க, மாவை சேனாதிராஜா, நிமல் சிறிபால டி சில்வா, விமல் வீரவன்ச ஆகியோர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீன்பிடித்துறைமுகத்திற்கு சொந்தமான துறைமுகத்தை தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்குவது...
யாழ் பல்கலை தனியார் ஒப்பந்த ஊழியர்கள் அரச நிரந்தர நியமனம் தொடரில் அமைச்சரிடம் கோரிக்கை!
உள்ளூர் உற்பத்தி நிலைகளை வலுப்படுத்துவதன் ஊடக சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் - அமைச்சர் டக்...
|
|
|


