கிரிக்கட் சபை தேர்தல் – சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற நடவடிக்கை!
Saturday, January 5th, 2019
கிரிக்கட் சபை தேர்தல் தொடர்பில் மேன்முறையீட்டு குழு நியமனம் பற்றி சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற எதிர்பார்த்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கட் சபை தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 07ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
தற்போது தேர்தல் குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ள வேட்பு மனுக்கள் தொடர்பிலான எதிர்ப்புக்களை ஜனவரி 7ம் திகதி சமர்ப்பிக்க முடியும்.
அதனுடன் தொடர்புடைய விசாரணைகள் எதிர்வரும் 11 ம் மற்றும் 12ம் திகதிகளில் இடம்பெறும் என கிரிக்கட் தேர்தல் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
அதன்படி , ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்களில் பெயர் பட்டியல் 14ம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
2ஆவது போட்டியிலும் நீஷம் இல்லை!
அசங்க குருசிங்கவுக்கு இலங்கை கிரிக்கெட் அணியில் உயர் பதவி!
கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார் - உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள், இரங்கல் தெரிவிப்பு!
|
|
|


