பிரேசில் ஜனாதிபதியாக ஜேர் போல்சோனாரோ பதவியேற்பு!
Thursday, January 3rd, 2019
பிரேசில் நாட்டில் பலத்த பாதுகாப்புடன் புதிய ஜனாதிபதியாக ஜேர் போல்சோனாரா பதவியேற்றார்.
கடந்த ஒக்டோபர் மாதம் பிரேசிலில் நடைபெற்ற அதிபர் பதவிக்கான பொதுத்தேர்தலில் முன்னாள் இராணுவ கேப்டனும், சமூக தாராளவாத கட்சியின் தலைவருமான ஜேர் போல்சோனாரா இடதுசாரி வேட்பாளர் சிரோ கோம்ஸ், தொழிலாளர் கட்சி வேட்பாளர் பெர்னாண்டோ ஹேடட் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவியது.
தேர்தலில் ஜேர் போல்சோனாரா 55 சதவீத வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தலைநகர் பிரேசிலியாவில் உள்ள பாராளுமன்றத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. துணை அதிபராக ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் ஹேமில்டன் மவுராவ் பதவியேற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
3 கோடி மக்கள் படுகொலையா - பில்கேட்ஸ் அதிர்ச்சி தகவல்!
முடிவுக்கு வந்தது விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு எதிரான விசாரணை!
இலங்கை குண்டுத் தாக்கதலின் எதிரொலி: தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
|
|
|


