2018 ஆம் ஆண்டில் போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 95,797 பேர் கைது!

Thursday, January 3rd, 2019

கடந்த 2018 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு சுற்றிவளைப்புகளின் போது 95,797 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வருடத்தில் மாத்திரம் 736 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் 40,860 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதவிர 4585 கிலோ கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றதுடன் அது தொடர்பில் 54,575 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளின்போது 19 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த சுற்றிவளைப்பு தொடர்பில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதவிர 13 கிலோ கிராம் ஹசீஸ் போதைப்பொருளும் 6 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 345 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106