விமானத்தில் தீ விபத்து – மத்தள விமான நிலையத்தில் பதற்றம்!
Wednesday, December 26th, 2018
மத்தள சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படிருந்த CVK 7042 என்ற விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
எனினும் விமான நிலையத் தீயணைப்பு படையினரால் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
குறித்த விமானம் நேற்று மாலை தாய்லாந்திலிருந்து மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியதுடன், இன்று காலை ஓமான் நோக்கி புறப்பட்ட தயாரான போதே தீப்பரவியுள்ளது.
குறித்த விமானத்தில் 7 அலுவலக பணியாளர்கள் இருந்த போதிலும் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென்றும், குறித்த தீப்பரவலுக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மத்தள விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
பலாலி விமானத்தளம் பிராந்திய விமானத்தளமாக அபிவிருத்தி!
மூன்றாம் நிலை நாடுகளைக் கொண்ட பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது இலங்கை நீக்கம் - ஐரோப்பிய ஆணைக்குழு அறி...
பொருளாதார நெருக்கடிகளுடன் வாழ்ந்துவரும் மாணவர்களுக்கு அமைச்சரால் வழங்கப்பட்ட உதவியானது காலமறிந்து செ...
|
|
|


