காபூலில் தற்கொலைக் தாக்குதல்: 40 பேர் பலி!
Thursday, June 30th, 2016
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 40 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
காபூலில் பொலிஸ் வாகனத் தொடரணியை இலக்குவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பயிற்சி இராணுவத்தினரும் பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்டவர்களை ஏற்றிச் சென்ற வாகனத் தொடரணி மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேடியத் தூதரகத்தில் பணியாற்றிய நேபாள நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு உரிமை கோரியுள்ளது.
Related posts:
பிரதமர் பதவி விலக கோரி மலேசியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
ரஷ்ய இராணுவம் லிபியப் பணியில் இல்லையாம்!
இந்தியா - இத்தாலி இடையிலான உச்சி மாநாடு: புதிய உலகத்துக்கு நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் - இந்தியா பி...
|
|
|


