சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார் உச்ச நீதிமன்ற நீதியரசர் ஈவா வணசுந்தர!
Friday, December 14th, 2018
உச்ச நீதிமன்ற நீதிபதி ஈவா வணசுந்தர இன்று தனது சேவையில் இருந்து ஓய்வு பெறுவதாக உச்ச நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று உச்ச நீதிமன்றத்தின் 502ம் இலக்க அறையில் ஈவா வணசுந்தர, புவனேக அலுவிகாரே மற்றும் விஜித் மலல்கொட ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வின் போது ஈவா வணசுந்தர தனது 40 ஆண்டு கால சேவையில் இருந்து ஓய்வு பெறுவதாக நீதியரசர் புவனேக அலுவிகாரே அறிவித்துள்ளார்.
இதன்போது நீதியரசர் ஈவா வணசுந்தரவின் சேவைக்கு நீதியரசர் புவனேக அலுவிகாரே பாராட்டுத் தெரிவித்ததுடன், ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஷ்வரனும் பாராட்டுக்களை தெரிவித்தார்.
Related posts:
தேர்தல் தொடர்பில் 5,236 முறைப்பாடுகள் பதிவு - தேசிய தேர்தல் ஆணையகம் தகவல்!
எந்தவொரு ஊழியரினதும் சம்பளத்தையும் குறைப்பதற்கான எண்ணம் அரசாங்கத்திற்கு கிடையாது - அமைச்சர் டளஸ் அழ...
கொழும்பு - யாழ். புகையிரத சேவை தற்காலிகமாக நாளைமுதல் இடைநிறுத்தம்!
|
|
|


