தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை – பாடசாலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!
Thursday, December 13th, 2018
2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையிலான பாடசாலை அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் நேற்றைய தினம் கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளன.
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரிக்கு அதிக பட்சமாக 176 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டது. வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு 167 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டது.
அத்துடன் கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ் மத்திய கல்லூரி, வவுனியா தமிழ் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு 164 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
Related posts:
நுளம்பு பெருகக்கூடிய சூழல்களை உடைய பாடசாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - சுகாதார திணைக்களம் அறிவிப்...
முதல் தடவையாக பெண்கள் மூவர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்வு!
யாழ் - மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு நோய் தொற்று மிக வேதனையை தருகின்றது - மாவட்ட அரச அதிபர் சிவப...
|
|
|


