அமைச்சரவைக்கு எதிரான வழக்கு ஜனவரி வரை ஒத்திவைப்பு!

Wednesday, December 12th, 2018

பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவிகளின் சட்டத்தன்மையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட கேள்வி விராந்து மனு மீதான விசாரணைகள் ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

எதிர்த்தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட கேள்வி விராந்து மனு மீதான விசாரணைகள் இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையிலேயே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று இந்த மனு மீண்டும் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, எதிர்வரும் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம், 17ம் மற்றும் 18ம் திகதிகளில் தொடர்ச்சியாக விசாரிப்பதற்காக ஒத்திவைக்கப்பட்டது.

அதுவரையில் அமைச்சரவை மற்றும் பிரதமர் பதவிக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Related posts:


பொலிஸ் மா அதிபர் விவகாரம் - பொருத்தமான நபரொருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உய...
டொனால்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சி - பாதுகாப்பு தோல்வியையடுத்து, அமெரிக்க இரகசிய சேவையின் பணிப்பாள...
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அமைச்சர் டக்ளஸ் முயற்சி - சீன அரசினால் வழங்கப்பட்ட அரிசி...