உணவகங்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
Monday, December 10th, 2018
உணவு பரிமாறும்போது கையுறை அல்லது உரிய உபகரணங்களை உபயோகிப்பது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அதிக கவனம் செலுத்தி கடும் நடவடிக்கை எடுக்க, சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இன்று(10) ஆரம்பமாகும் தேசிய உணவு பாதுகாப்பு வாரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாடு பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஜே.கே.ஜயசிங்க மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
இம்முறை “உணவுகளை பாதுகாப்பாக கையாளுவோம் – கையுறை அல்லது தகுதியான உபகரணங்களை உபயோகிப்போம்” எனும் தொனியின் கீழ் தேசிய உணவு பாதுகாப்பு வாரம் எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது
Related posts:
தண்டவாளத்தில் நடந்தால் அபராதம்.!
பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவிற்கான கோல் அலரி மாளிகையில் வரவேற்கப்பட்டது!
வடக்கின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் 8 மணிமுதல் பணிப்புறக்கணிப்பு - நோயாளர்கள் அவதி!
|
|
|


