வீதி விபத்துக்களால் 13.5 லட்சம் பேர் பலி – உலக சுகாதார அமைப்பு தகவல்!
Monday, December 10th, 2018
உலகம் முழுவதும் வீதி விபத்துகளில் ஒவ்வோர் ஆண்டும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், உலகம் முழுவதும் வீதி விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
5 முதல் 29 வயது வரையுடைய இளம் வயதினரின் உயிரிழப்புகளுக்கு வீதி விபத்துகள்தான் முக்கிய காரணமாக விளங்குகின்றன.
2016-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, வீதி விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 13.5 லட்சமாக அதிகரித்துள்ளது. அதாவது, 24 விநாடிகளுக்கு ஒருவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார்.
2013-ஆம் ஆண்டில் ஏற்பட்ட 12.5 லட்சம் உயிரிழப்புகளோடு ஒப்பிடுகையில் இது 1 லட்சம் அதிகமாகும். இந்த எண்ணிக்கை, அடுத்த ஆண்டுகளில் இன்னும் மோசமான அளவில் அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
தரம் 13 வரை உறுதிப்படுத்தப்பட்ட கல்வி: இரண்டாம் கட்டம் ஆரம்பம்!
ஐ.நாவில் இலங்கை தொடர்பில் விசேட அறிக்கை!
நச்சுப்புகையை வெளியேற்றம் ஆயிரக்கணக்கான வாகனங்கள் - சட்ட நடவடிக்கை எடுக் பொலிஸார் தவறிவிட்டதாக மோட்ட...
|
|
|


