தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்தும் பணிகள் நிறைவு!
Saturday, December 8th, 2018
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த வாரத்தில் பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பெறுபேறுகள் கல்வி அமைச்சு மற்றும் பாடசாலைகளுக்கு அனுப்பப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மீள்பரிசீலனைக்கு 20,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்ததாக அவர் மேலும் கூறியுள்ளார்.
Related posts:
பல்கலைச் சம்பவத்தை இனவாதமாக்கவேண்டாம் - பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண!
வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தயாராகும் நோயாளர் காவு வண்டி சாரதிகள்!
முன்அறிவிப்பு இன்றி வைத்தியர்களின் பணி நிறுத்தம்!
|
|
|


