கட்டடம் மீது விமானம் மோதி விபத்து அமெரிக்காவில் இருவர் பலி!
Monday, December 3rd, 2018
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் சிறியரக விமானம் ஒரு கட்டிடத்தின் மீது மோதிய விபத்தில் விமானி உட்பட இருவர் உயிரிழந்தனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஹில்லியார்ட் நகரை நோக்கி நேற்று பிற்பகல் ஒரு செஸ்னா 335 ரக சிறிய விமானம் புறப்பட்டு சென்றது.
சிறிது தூரம் சென்றதும் வழியில் நிலைதடுமாறி, மிகவும் தாழ்வாக பறந்த அந்த விமானம் ஃபோர்ட் லாடெர்டேல் நகரில் மனஇறுக்கம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பயிற்சி மையம் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தின்மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் விமானம் முழுவதும் தீபிடித்து எரிந்து சாம்பலானதில் இருந்த விமானி மற்றும் ஒரு பயணி இருவரும் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தனர். அங்கிருக்கும் பயிற்சி மையத்தை சேர்ந்த ஒரு ஆசிரியர் இந்த விபத்தில் காயமடைந்தார்.
Related posts:
பாகிஸ்தான் இந்தியா மீது அணுஆயுத தாக்குதலுக்கும் தயார் - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்!
இரு வாரங்களுக்கு முடங்குகின்றது மலேசியா!
ஈரானுடனான ரஷ்யாவின் ஒப்பந்தம் விரைவில் - அச்சத்தில் மேற்கு நாடுகள்!
|
|
|


