யாழில் எலிக்காய்ச்சலால் மாணவன் இறப்பு!
Thursday, November 29th, 2018
எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவன் ஒருவன் சிகிச்சை பயனளிக்காத நிலையில் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
தெல்லிப்பழை கொல்லங்கலட்டியைச் சேர்ந்த சிவசுதன் தவக்குமரன் (வயது 17) காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்தார்.
எலிக் காய்ச்சல் என்று அறிமுகப்படுத்தப்படும் லெற்றோ வைரஸ் மாணவனைத் தாக்கியிருக்கலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
Related posts:
சஹரானின் அடைப்படைவாதத்தை மீள் உருவாக்கும் முயற்சி - சந்தேகத்தின் பேரில் 30 இளைஞர்கள் காத்தான்குடி ப...
ஜனாதிபதி தலைமையிலான அரசு நாட்டை கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுள்ளது - அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப...
தொல்புரம் பாணாவெட்டி வைத்தியசாலையின்*மருத்துவரை இடமாற்ற வேண்டாம் - மக்கள் கோரிக்கை!
|
|
|


