‘சார்க்’ மாநாட்டில் இந்தியா பங்கேற்காது – இந்திய வெளியுறவு அமைச்சர்.!
Thursday, November 29th, 2018
பாகிஸ்தானில் நடைபெறும் தெற்காசிய கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று(28) அறிவித்துள்ளார்.
‘சார்க்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் தெற்காசிய கூட்டமைப்பு மாநாட்டை 02 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு உறுப்பு நாடு பொறுப்பேற்று நடத்தும்.
அதன்படி இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது
Related posts:
தொழில்நுட்பப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே உள்ளுராட்சி மன்ற தேர்தல் சீர்திருத்த சட்டமூலம் - அமைச்சர் ...
பாடசாலை மாணவர்கள் மாவட்டங்களுக்கு இடையில் பயணிப்பதனை முடிந்தளவு குறைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை!
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது இலங்கையின் நலனுக்கே சிறந்தது - இந்திய உயர்ஸ்தானிகர...
|
|
|


