சபரிமலை யாத்திரை புனித யாத்திரையாக பிரகடனம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை அமைச்சரவை அங்கீகரித்தது.
Tuesday, November 27th, 2018
சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்வைத்த விசேட அமைச்சரவைப் பத்திரத்திற்கே இன்று(27.11.2018) கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இம்மாதம் 17ஆம் திகதி அமைச்சரைச் சந்தித்த கொம்பனித்தெரு ஸ்ரீ ஹரி ஹர சுதன் ஐயப்ப சுவாமிகளின் பிரதிப்குமார் தலைமையிலான யாத்திரைக்குழுவினர், சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்ய அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கையிலுள்ள அனைத்து சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்கள் சார்பில் விடுத்த கோரிக்கையை விரைவில் நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



Related posts:
கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன தீவக வைத்தியசாலைகள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம். பி சுட்டிக்காட்டு!
அவசரகாலச் சட்டம் மனித முகங்களைக் கொண்டு செயற்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
கடற்றொழிலாளர் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன? - ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
|
|
|
சர்வதேச சமூகம் நியாயமான தீர்வு கிடைக்க பங்களிப்புச் செய்ய வேண்டும். ஐ.நா உதவிச் செயலாளர் நாயகத்திடம்...
மயானங்களை துப்புரவு செய்யும் போலித் தேசியவாதிகள் எமது மக்களின் துயரங்களை துப்புரவு செய்வதற்குத் தயார...
வல்லாட்சியில் சீனக் கடலட்டைப் பண்ணைகளுக்கு யாழில் இடமில்லை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்...


