சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு டிசம்பரில்!

Tuesday, November 27th, 2018

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு சுகததாஸ உள்ளரங்க அரங்கில் டிசம்பர் மாதம் 04ஆம் திகதி இடம்பெற உள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (26) இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போதே இது சம்பந்தமான இறுதித் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அந்தக் கட்சியின் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச இதனைக் கூறினார்.

Related posts:

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் நீக்கப்படலாம் – நாளை இறுதி முடிவு எட்ட...
தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்பவர்களுக்கான தடுப்பூசிக்கு எவ்வித கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாத...
பேருந்தில் பெண்களுடன் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டு - யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் பொலசாரால் கைத...