அதிவேக தபால் சேவை தீவுப் பகுதிக்கும் விரிவு!
Saturday, November 24th, 2018
யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் அதிவேக தபால் சேவைகள் தற்போது படிப்படியாக பரவலாக்கப்பட்டு வரும் நிலையில் தீவுப் பகுதிக்கும் இந்தச் சேவை நகர்த்தப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணத் தலைமைத் தபாலகம் தெரிவித்தது.
மக்களுக்கு துரிதமான சேவையை வழங்கும் நோக்கிலும் தபால்துறையின் எதிர்கால இருப்பைத் தக்கவைக்கும் நோக்கிலும் யாழ்ப்பாணத்தில் அதிவேக தபால் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதிவேக தபால் சேவைக்காக பல்வேறு தபாலகங்களுக்கு உந்துருளி வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தீவுப் பகுதிக்கும் இந்தத் துரித தபால் சேவை கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இதற்காக வேலணை தபாலகத்துக்கு தபால் விநியோகத் தேவைக்கென உந்துருளி வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
செய்தி பிரசுரிப்பது தொடர்பில் ஒழுக்கவிதி அறிமுகம்- பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன!
மனிதாபிமான அடிப்படையில் வீசா வழங்கத் தேவையில்லை – ஐரோப்பிய ஒன்றிய உயர் நீதிமன்றம்!
யாழ்ப்பாணத்தில் மாபெரும் தொழிற் சந்தை நிகழ்வினை முன்னெடுக்கும் மாவட்டச் செயலகம்!
|
|
|


