டெங்கு காய்ச்சலால் 42,000 பேர் பாதிப்பு!
Monday, November 19th, 2018
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், சுமார் 42,000 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதுடன், வடக்கு மற்றும் மேல் மாகாணங்களில் நுளம்புக் குடம்பிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாக வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.
இதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் நினைவுப்பேருரைநிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்றுசிறப்பிப்ப...
இலங்கையின் முன்னேற்றம் போதாது - சுட்டிக்காட்டுகின்றது பிரித்தானியா!
ஜனாதிபதித் தேர்தல் : நாளை நள்ளிரவுடன் பிரசாரங்களும் நிறைவுக்கு - மஹிந்த தேஷப்பிரிய!
|
|
|


