எரிபொருள் விலை குறைப்பு : பேருந்துக் கட்டணம் குறைக்கப்படுமா?
Friday, November 16th, 2018
எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து பயண கட்டணங்களை குறைக்க முடியாது என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
பேருந்து தொழிற்துறையை நடாத்திச் செல்வதற்கான செலவீனங்கள் அதிகரித்துள்ள நிலையில் பேருந்து பயண கட்டணங்களை குறைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் பேருந்து பயண கட்டணங்களை குறைப்பது தொடர்பில் தமது நிறைவேற்றுக் குழு கூடி இறுதி தீர்மானம் ஒன்றை எட்டவுள்ளதாக அகில இலங்கை பேருந்து நிறுவனங்களின் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அதன் பிரதான செயலாளர் அஞ்ஜன ப்ரியன்ஜித் இதனை தெரிவித்துள்ளார்.
Related posts:
ஜீப் வண்டியில் பிறந்த ஆண் குழந்தை - வட்டுக்கோட்டையில் சம்பவம்!
ஹப்புத்தளையில் எரிபொருள் கொள்கலன் ஊர்தி விபத்து – உதவியாளர் மருத்துவமனையில்!
பாதீடு மதிப்பீடுகளைத் தயாரிக்கும் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம் - நிதி அமைச்சு!
|
|
|
நாட்டில் 365 நாட்களுள் 3 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட் தொற்றுறுதி - அரசாங்கத் தகவல் திணைக்கள...
எரிபொருள் விலை அதிகரிப்பு, - பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிரானது - பொருளி...
பாதீனியம் அற்ற பிரதேசமாக வலி.வடக்கு மாற்றப்பட வேண்டும். – விசேட பிரேரணை சமர்ப்பித்தது ஈ.பி.டி.பி


