அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை முருகண்டி பிள்ளையார் ஆலய நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை முன்வைப்பு!
Sunday, November 11th, 2018
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முருகண்டி பிள்ளையார் ஆலய நிர்வாகிகளுடன் இன்றைய தினம் (11.11.2018) சந்திப்பொன்றை மேற்கொண்டார்.
இதன்போது ஆலய புனரமைப்பு மற்றும் அடியார்களுக்கான தங்குமிட வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான கோரிக்கைகளை ஆலய நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவான்நதா அவர்களிடம் முன்வைத்தனர். ஆலயத்தை பார்வையிட்ட அமைச்சர் காலக்கிரமத்தில் குறித்த கோரிக்கைகளுக்கான தீர்வினை பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளார்.
முன்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை ஆலய நிர்வாகத்தினர் மலர்மாலை அணிவித்து கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






Related posts:
வடபகுதி முகம்கொடுக்கும் நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா ...
வெளிநாடுகளில் மருத்துவப் படிப்புகளை மேற்கொண்டு இலங்கை திரும்புகினறவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக...
யாரையும் பழிவாங்குவது எமது நோக்கம் அல்ல - மட்டக்களப்பில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
|
|
|


