வாகன விபத்து: சீனாவில் 14 பேர் உயிரிழப்பு!
Monday, November 5th, 2018
சீனாவின் அதிவேக வீதியில் உள்ள சுங்கச்சாவடி அருகே பார ஊர்தி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது அடுத்தடுத்து மோதிய 14 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிசார் மற்றும் மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
காஷ்மீர் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்த இந்திய படைவீரர் பாகிஸ்தானால் சிறை பிடிப்பு!
சீனாவுடன் பேச்சுவார்த்தை - ட்ரம்ப்!
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பு – திணறும் பிரேசில் மருத்துவமனைகள்!
|
|
|


