எரிபொருள் விலைகள் குறைப்பு!
Friday, November 2nd, 2018
கடந்த ஆட்சிக் காலத்தில் சடுதியாக உயர்த்தப்பட்ட எரிபொருட்களின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, 92 ஒக்டைன் பெற்றோல் வகைகள் 10 ரூபாவால் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் 155 ரூபாவில் இருந்த 145 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
டீசலின் விலை 7 ரூபாவினாலும் குறைக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே, டீசலின் புதிய விலை 123 ரூபாவில் இருந்து 116 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மையில் ஏற்படுத்தப்பட்ட புதிய அரசாங்கத்தில் நிதி அமைச்சராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
பயணத்தடை இல்லை - உலக சுகாதார ஸ்தாபனம்!
யாழில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு!
உந்துருளியில் வந்த இருவரால் பெண்ணின் தங்கச்சங்கிலி அறுப்பு - தென்மராட்சியில் சம்பவம்!
|
|
|


