அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்கிறார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Tuesday, October 30th, 2018
புதிய அரசாங்கத்தில் அமைச்சராக பதவியேற்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது அமைச்சின் பொறுப்புக்களை இன்றையதினம் ஏற்கவுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்தில் நேற்றையதினம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் இந்துவிவகார அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன முன்னிலையில் பதவியேற்றிருந்தார்.
இந்நிலையில் குறித்த அமைச்சின் பொறுப்புக்களை கொழும்பிலுள்ள அமைச்சின் உத்தியோக பூர்வ அலுவலகத்தில் வைத்து தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
வேலணை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை வெற்றி கொண்டது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!
நாம் அன்று கூறியதையே மனப்பாடம் செய்து கூட்டமைப்பு இன்று கூறிவருகின்றது : இதுவே யதார்த்தம் – டக்ளஸ் எ...
13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த கூறியிருக்கும் இந்திய பிரதமருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்த...
|
|
|


