பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா பதவியிலிருந்து நீக்கம்!
Thursday, October 18th, 2018
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவினை பதவியில் இருந்து இடைநிறுத்துமாறு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
அதற்கான சுற்றுவட்டம் அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்னவின் கையொப்பத்துடன் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவுறும் வரையில் அவரை பதவி இடைநிறுத்தம் செய்ய அமைச்சு தீர்மானித்துள்ளது.
Related posts:
சர்வதேச ரீதியில் வேலை வாய்ப்பினை பெறுவதற்கு நடவடிக்கை -விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்...
உக்ரைன் நகரங்கள் மீது இடம்பெற்ற குண்டுவீச்சு தாக்குதலை ரஸ்ய படைகள் நடத்தவில்லை - புடின் தகவல்!
அத்தியாவசிய பொருளாக கோதுமை மா அறிவிப்பு - வர்த்தமானியும் வெளியானது!
|
|
|


