சுவர் இடிந்து விழுந்ததில் பாகிஸ்தானில் 9 குழந்தைகள் பலி!
Saturday, October 13th, 2018
பாகிஸ்தானின் சுக்கூர் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமிகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குலாம் சர்வார் ஷம்பானி கிராமத்தில் உள்ள மண் வீட்டின் அருகில் 4 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் சிலர் நேற்று விளையாடிக் கொண்டிருந்த வேளையில், மண் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் சுவர் இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகளை மீட்டனர். இந்த விபத்தில் 7 பெண் குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
கிரிமினல்கள் பட்டியலில் மோடி : கூகுளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!
தெற்கு சூடானில் மோதல்!
இராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி இந்திய உயர்நீதிமன்றில் மேன்முறையீடு!
|
|
|


