அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சலுகை விலையில்!
Thursday, October 11th, 2018
அத்தியாவசிய உணவுப் பொருட்களை சலுகை விலையில் ச.தொ.ச மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக வழங்க தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
ரூபாவின் பெறுமானம் குறைந்துள்ள போதிலும் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அதிகரிக்காமல் நுகர்வோருக்கு தற்போதுள்ள விலையில் வழங்கப்படுவதாக அமைச்சின் பணிப்பாளர் திருமதி இந்திகா ரணதுங்க தெரிவித்தார். அரசாங்கம் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளது.
வாழ்க்கைச் செலவினக் குழு வாராந்தம் ஒன்றுகூடி சந்தை விலை மட்டங்களை ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Related posts:
ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துத் தபால் ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் யாழிலும் முன்னெடுப்பு!
நொதேர்ன்பவர் வழக்கை விசாரணைக்கு எடுக்குமாறு கோரிக்கை!
புதியவர்களை உள்வாங்குவதும் மாற்றங்களை உருவாக்குவதும் அவசியம் - கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் கி.ப...
|
|
|


