கிராமிய மருத்துவமனைகளில் உரிய தாள்களில் எழுதி மாத்திரைகளைத் தரவும்!
Tuesday, September 25th, 2018
கிராமிய மருத்துவமனைகளில் மருந்துகள் சுற்றிக் கொடுக்கப்படும் கடதாசிகள் உரிய முறையில் இல்லை. ஏற்கனவே எழுதப்பட்ட குறிப்புப் புத்தகங்களின் தாள்களிலும் இதுபோன்ற ஒழுங்கற்ற கடதாசிகளிலும் அவற்றை எழுதுவதால் மருந்தாளர் எழுதித் தருவதையும் ஏற்கனவே எழுதியுள்ளவற்றையும் வேறுபடுத்த முடியவில்லை என்று பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.
மருந்து வழங்க உறைகள் இன்மையால் பழைய கடதாசிகளில் அல்லது ஏற்கனவே மாணவர்கள் எழுதிய குறிப்புப் புத்தகங்களிலிருந்து பெறப்பட்ட தாள்களில் சுற்றியே மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இது முதியோருக்கு மட்டுமின்றி இளையோருக்கும் சிக்கலாக உள்ளது.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சு இதற்கு நிதி ஒதுக்கி சீரானதும் பாதுகாப்பனதுமான முறையில் மாத்திரைகளை வழங்க வேண்டும் .
Related posts:
இளம் வர்த்தகர் சுலைமானின் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை மரபணு பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவு!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமனம்!
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா ஆரம்பம் - நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து...
|
|
|


