அமரர் சிங்ஸிலி செல்வக்குமாரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அஞ்சலி மரியாதை !
Monday, September 3rd, 2018
காலஞ்சென்ற அமரர் சிங்ஸிலி செல்வக்குமாரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சாத்தி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளனர்.
கலட்டி – யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றையதினம்சென்ற கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன் மற்றும் கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் ஆகியோர் மலர்வளையம் சாத்தி அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்தனர்.
இதனிடையே காலஞ்சென்ற சிங்ஸிலி செல்வக்குமார் பாரம்பரிய இடதுசாரி கட்சியின் உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவிர ஆதரவாளருமாவார் என்பது குறிப்பிடத் தக்கது.

Related posts:
பல்கலைக்கழக நடவடிக்கைகளை நவம்பரிற்குள் ஆரம்பிக்க நடவடிக்கை - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப...
வடக்கில் முதலீடுகளை செய்ய முன்வாருங்கள் - முதலீட்டாளர்களுக்கு வடக்கின் ஆளுநர் அழைப்பு!
குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் பரவும் அபாயம் - சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை !
|
|
|


