யாழ்ப்பாணம் பெரியபுலம் பாடசாலையில் மாணவிகளுடன் தகாதமுறையில் ஈடுபட்ட ஆசிரியருக்கு விளக்கமறியல்! 

Thursday, June 23rd, 2016

யாழ்ப்பாணம் பெரியபுலம் பாடசாலையில் மாணவிகளுடன் தகாதமுறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை அடுத்த மாதம்-4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  யாழ். நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை(23) உத்தரவிட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரொருவர் அங்கு கல்வி பயிலும் மாணவிகள் சிலருடன் தகாதமுறையில் நடந்து கொண்டதாகப்  பாடசாலை மாணவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த நிலையில் துஸ்பிரயோகத்திற்குக் காரணமான ஆசிரியரைக்  கைதுசெய்து அவருக்கு எதிராகச்  சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப்  பாடசாலை மாணவர்களும், பழைய மாணவர்களும் வலியுறுத்தியிருந்தனர். இந்தக்  கோரிக்கையை முன்வைத்து நேற்றுப் புதன்கிழமை(22) போராட்டமொன்றையும் நடாத்தியிருந்தனர்.

இதனையடுத்துக்  குறித்த ஆசிரியர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்டச்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் உறுதிமொழி அளித்ததன் பேரில் மாணவர்கள் தமது போராட்டத்தைக்  கைவிட்டிருந்தனர்.

குறித்த ஆசிரியரை நேற்றைய தினம்  கைதுசெய்த பொலிஸார் விசாரணைகளை அவர்களிடம் தீவிர விசாரணைகள் மேற்கொண்டனர். இதனையடுத்துஇன்றைய  தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர். இதன்போதே நீதவானால் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Related posts:

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வரை பாடசாலைகளை திறக்க முடியாது - கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ...
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் – ஒருவர் பலி – 600 க்கும் மேற்பட்டோர்...
யூரியூப் வலைத்தளத்தில் பதிவிடும் வீடியோக்களுக்கு வழங்கப்படும் கட்டணங்களில் எதிர்வரும் 15ஆம் திகதி மு...

போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் நிச்சயம் அதனை செயற்படுத்துவோம் - இராணுவ ...
“ஸ்ரீலங்காஸ் ஈஸ்டர் போம்பிங் டிஸ்பெச்சஸ்” - வெளியானது ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பிலான ஆவணப்படம்!
டிசம்பர் மாதத்திற்குள் கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் செய்யப்படும் - வர்த்தக அமைச்சர் நளின் பெர்ன...