ஜனாதிபதியை சந்திக்கும் தேசிய சம்பள ஆணைக்குழு உறுப்பினர்கள் !
Monday, August 27th, 2018
சம்பள முரண்பாட்டை நீக்கி தேசிய சம்பள கொள்கை ஒன்றை வகுப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான நியமன கடிதங்கள் இன்று(27) வழங்கப்படவுள்ளன,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்த ஆணைக்குழுக்கு 15 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அரச நிர்வாக சேவையின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரியான எஸ்.ரணுக்கே இதன் தலைவராக செயற்படுகிறார்.
மொத்த அரச கட்டமைப்பையும் மதிப்பீடு செய்து புதிய சம்பள கட்டமைப்பை தயாரிப்பதே ஆணைக்குழுவின் நோக்கமாகும். இது தொடர்பாக ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது.
Related posts:
அமெரிக்க கடற்படை கப்பல் இலங்கை வருகை!
இலங்கை - இந்திய படகு சேவைக்காக காங்கேசன்துறை துறைமுகத்தை விரிவுபடுத்தும் கடற்படை!
யாழ் பல்கலை மாணவனுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த வகுப்புத்தடை உத்தரவு -இழப்பீட்டுக்கும் விண்ணப்பம்!
|
|
|


