மீண்டும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!
Friday, August 24th, 2018
நாளை முதல் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கவுள்ளதாக வாழ்க்கைச் செலவுக் குழு தீர்மானித்துள்ளதாக குறித்த குழுவின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய 12.5Kg சமையல் எரிவாயுவின் விலையினை 158 ரூபாவினால் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, சமையல் எரிவாயுவின் புதிய விலையானது 1696 ரூபாவாக அறிவிக்கப்படவுள்ளது.
சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பினை கருத்தில் கொண்டு சமையல் எரிவாயு நிறுவனங்கள் விலை அதிகரிப்பிற்கு கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் சமையல் எரிவாயுக் கொள்கலன் ஒன்று 245 ரூபாவால் அதிகரித்து கடந்த ஜூன் மாதம் 138 ரூபாவினால் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
Related posts:
உர நிவாரண உதவித் தொகைகளை வழங்கும் முதலாவது கட்டம் ஆரம்பம்!
உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் இரவு 9 மணிக்கு வெளிவரும் - சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு!
கொரோனா வைரஸ் : இதுவரை 813 பேர் பலி!
|
|
|


