மடு தேவாலயத்தில் பிரதமர் ரணில்!

Wednesday, August 15th, 2018

மன்னார் மடு அன்னையின் வருடாந்த மாபெரும் உற்சவமான ஆவணி உற்சவத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வருகை தந்துள்ளார்.

மன்னார் மடு திருத்தலத்தில் இன்று காலை மாபெரும் உற்சவமான ஆவணி உற்சவத்தின் இறுதி நாள் முன்னெடுக்கப்படுகின்றது. இதில் கலந்துகொள்வதற்காக நாடெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகைத்தந்துள்ளனர்.

இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அழைப்பின் பேரில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமரின் இந்த வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:


எமது மக்களுக்கு ஏமற்றங்கள் இனியும் வேண்டாம் - ஈ.பி.டி.பியின் வவுனியா மாவட்ட நிர்வாவ செயலாளர் திலீபன்...
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இவ்வருடம் தீர்வுகளை அரசு வழங்கும் - பிரதமர் மகிந்த ராஜபக்ச தெர...
கடும் வறட்சி - நீர் ஆதாரங்கள் மாசடைவதால் சுகாதார சிக்கல் - குடிநீர் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள...