ரயில்வே பணிப்புறக்கணிப்பு : போக்குவரத்தில் இடையூறெனின் உடன் அழைக்கவும்!
Friday, August 10th, 2018
ரயில்வே பணிப்புறக்கணிப்பை அடுத்து இலங்கை போக்குவரத்து சபை, பயணிகளுக்கான பேருந்து சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.
இதனடிப்படையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது 500 பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை புகையிரத பருவகால சீட்டை வைத்துள்ள பயணிகள் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் இலவசமாக பயணிக்க முடியும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இவை தொடர்பில் ஏதேனும் பிரச்சனைகள் இருக்குமாயின் அது தொடர்பாக 0117 505 555 என்ற தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
Related posts:
தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!
ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னரே தற்போதைய அபாயகரமான நிலை குறைவடையும் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ந...
இந்தியா – இலங்கை இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது - ஜனாதிபதி ரணில் தெரிவிப...
|
|
|


