இந்திய சாத்திரக்காரர்கள் யாழில் கைது!
Thursday, August 9th, 2018
இந்தியாவில் இருந்து வருகை தந்து யாழில் தங்கியிருந்த 5 சாத்திரக்காரர்களை குடிவரவு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் உள்ள குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் யாழ்.நகரில் உள்ள பிரபல விடுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஐந்து பேரும் கடவுச் சீட்டு காலம் நிறைவடைந்த பின்னரும் யாழில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை கட்டுநாயக்க விமான நிலைய அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதுடன், விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related posts:
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான யோசனை விரைவில் நாடாளுமன்றத்தில் - அமைச்சர் பைசர் முஸ்தபா!
யாழில் மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரிப்பு!
ஜேர்மனியில் இருந்து உயர்தரத்திலான புகைவிசிறல் இயந்திரங்கள்!
|
|
|


