விளையாட்டுத் துறையை மேம்படுத்த பிரதமர் விளையாட்டு நிதியம்!
Wednesday, August 8th, 2018
விளையாட்டுத் துறையின் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு முதற்தடவையாக பிரதமர் விளையாட்டு நிதியம் ஒன்று 50 மில்லியன் ரூபாவுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது விளையாட்டுத் துறையின் மேம்பாட்டிற்காக அரச மட்டத்தில் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
நகரத்திற்கு மாத்திரம் வரையறுக்காமல் கிராமிய மட்டங்களிலும் விளையாட்டுத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாட்டின் வீர வீராங்கனைகளை சர்வதேச தளத்திற்கு கொண்டு செல்வது இந்த விளையாட்டு நிதியத்தின் நோக்கமாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
Related posts:
தனியார் கல்வி நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு – யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்.!
238 சிபெட்கோ பெட்ரோல் நிலையங்களும் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னர் மூடப்படும் - பெட்ரோலிய பிரிவி...
நாளை நள்ளிரவுடன் பிரசார பணிகளுக்கு தடை - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவிப்பு!
|
|
|


