உதைபந்தாட்டக் கம்பம் வீழ்ந்து மாணவன் பலி!
Wednesday, August 8th, 2018
உதயநகர்ப் பகுதி மைதானத்திலுள்ள உதைபந்தாட்ட கம்பம் சரிந்து தலையில் விழுந்ததில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மோகனதாஸ் மதியமுதன் என்ற மாணவனது தலையில் உதைபந்தாட்டக் கம்பம் சரிந்து விழுந்ததால் படுகாயமடைந்த மாணவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்த மரணம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
முச்சக்கரவண்டி வேக கட்டுப்பாடு தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்!
2.9 மில்லியன் குடும்பங்களுக்கு நாளை முதல் இலவச அரிசி விநியோகம் - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவ...
வசந்த முதலிகே உள்ளிட்ட 5 பேருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாட சந்தர்ப்பம்!
|
|
|


