2 ஆம் தவணைக்குப் பின்னர் மாணவர்களுக்குச் சீருடை!

Thursday, July 26th, 2018

பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடத்துக்கான சீருடை வவுச்சர் இரண்டாம் தவணை விடுமுறைக்கு பின்னர் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்குத் தேவையான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்றும் அமைச்சு தெரிவிக்கின்றது.

43 இலட்சம் பாடசாலை மாணவர்களும் பிரிவெனாக்களில் கல்வி பயில்வோரும் தேவையான சீருடைத்துணியை வவுச்சர் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

கடந்த முறையைப் போன்று இந்த முறையும் வவுச்சர் நடைமுறை முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. தேவையான நிதி அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர் ஒருவருக்கு நிதி சுயாதீனக்குழு மூலம் தீர்மானிக்கப்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts:


யாழ்ப்பாணத்தில் மேலும் 48 பேருக்குக் கொரோனா தொற்று - கொடிகாமத்தில் மட்டும் 24 பேர் இனங்காணப்பட்டதாக ...
ஐ.நா சபை பொதுச் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ள அவசர காலநிலை நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் இ...
அமைச்சர் அலி சப்ரி இந்த வாரம் ருமேனியா மற்றும் போலந்திற்கு நான்கு நாள் விஜயம் - புக்கரெஸ்டில் புதிய ...