அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்!
Monday, July 23rd, 2018
தம்முடன் யுத்தம் ஒன்றை மேற்கொள்ள அமெரிக்கா முயற்சிக்குமானால் அதுவே அனைத்து யுத்தங்களுக்கும் முதன்மை யுத்தமாக அமையும் என ஈரான் எச்சரித்துள்ளது.
சர்வதேச நாடுகளில் உள்ள ஈரான் நாட்டு தூதர்கள் மத்தியில் உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரவுகானி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொண்ட அமெரிக்கா, ஈரான் அரசாங்கம் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.
இந்த நிலையிலேயே குறித்த எச்சரிக்கையை ஈரானிய ஜனாதிபதி விடுத்துள்ளார்.
Related posts:
மத்திய தரைக்கடலில் மூழ்கி 200 பேர் பலி?
இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் - வடகொரியாவை எச்சரிக்கும் அமெரிக்கா!
இம்ரான் கானுக்கு இந்தியப் பிரதமர் வாழ்த்து!
|
|
|


