கல்வி தகைமையில் ஆண்களை விட பெண்கள் முன்னிலையில்!
இலங்கையில் அரச மற்றும் அரச தனியார் கூட்டுறவுத் துறைகளில் பணியாற்றுகின்ற பெண்கள் பலர், அவர்கள் வகிக்கும் பதவியிலுள்ள ஆண்களைக் காட்டிலும் அதிக கல்வித் தகைமை உடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்ததுறைகளில் 1.1 மில்லியன் சேவையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் தொழில்புரிபவர்களாக உள்ளனர்.
இதேநேரம் அரச சேவையாளர்களில் 55 சதவீதமானவர்கள் ஆண்களாகவும், 45 சதவீதமானவர்கள் பெண்களாகவும் இருக்கின்றனர்.
Related posts:
கட்டுநாயக்க விமான நிலைய புனரமைப்புப் பணிகள் 75 சதவீதம் பூர்த்தி!
நியமனம் வழங்கப்படாதுள்ள பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கு எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதிக்கு ம...
உள்ளூராட்சி தேர்தலில் - அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று...
|
|
|


