நயினாதீவு கடலில் மூழ்கி மூவர் பலி!
Sunday, June 19th, 2016
நயினாதீவு நாக பூசணிஅம்மன் ஆலய வருடாந்திர தேர்த்திருவிழாவுக்கு சென்ற எட்டுப் பேர் அடங்கிய இளைஞர் குழுவொன்று நயினாதீவு கடலில் நீராடிய போது அதில் மூவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் கோண்டாவில் நாராயணன் கோவிலடியைச் சேர்ந்த இளைஞர்கள் மூவரே இவ்வாறு நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். பலியாகிய இளைஞர்களில் இருவர் சகோதரர்கள் ஆவர்.
மூவரது சடலங்களுக்கும் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
சார்க் மாநாட்டில் பங்கேற்கிறார் நிதிஅமைச்சர் பாகிஸ்தான் பயணம்!
பாரம்பரிய முறைப்படி முழுமையாக விவசாயத்தில் ஈடுபடுங்கள் – விவசாயிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ த...
மதுபான போத்தல்களுக்கு இன்றுமுதல் பாதுகாப்பு ஸ்டிக்கர் நடைமுறைக்கு அமுல் - மதுவரி திணைக்களம் தகவல்!
|
|
|


