வடக்கு – கிழக்கு வீடமைப்புக்காக 300 கோடி ரூபா நிதி!
Tuesday, July 10th, 2018
தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்திற்காக இந்த ஆண்டில் அரசாங்கம் ஆயிரம் கோடி ரூபா செலவிட்டுள்ளது.
இதில் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு 300 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் லக்விஜய சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார்.
875 மாதிரிக் கிராமங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. இதில் 90 கிராமங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. மாதிரிக் கிராம வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதியளவில் இரண்டாயிரத்து 500 வீடுகளை மக்களிடம் கையளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டிலிருந்து இதுவரை தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் மூலம் இரண்டு லட்சத்து 75 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாகதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் லக்விஜய சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார்.
Related posts:
பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அதிகாரிகள் தடையாகவுள்ளனர் - மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல...
லொத்தர் சீட்டிழுப்பு வெற்றியாளர்களுக்கான காசோலைகள் பிரதமரினால் வழங்கிவைப்பு!
PSTA மேலும் வலுமையாக்கும் அனுரவின் PTA - ஐ. நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் கவலை!
|
|
|


