Saturday, March 5th, 2016

எங்களுக்குள் மறைந்திருக்கும் முழுத்திறமையையும் வெளிக்கொண்டு வந்து இந்தியாவிற்கு எதிராக நிச்சயம் வெற்றி பெறுவோம் என வங்கதேச அணியின் தமீம் இக்பால் தெரிவித்துள்ளார்.

ஆசியக் கிண்ணப் போட்டியின் இறுதிப் போட்டியில் நாளை இந்தியா- வங்கதேச அணிகள் மோதுகின்றன.

இந்த தொடரின் முதல் லீக் போட்டியில் வங்கதேசம் அணியை இந்தியா 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

எனவே மீண்டும் இரு அணிகளும் மோதுவதால் இந்தியாவிற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்தியாவை நாங்கள் வீழ்த்துவோம் என அணியின் தொடக்க ஆட்டக்காரரான தமீம் இக்பால் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்தியாவிற்கு எதிராக மறக்க முடியாத போட்டிகளை நாங்கள் விளையாடியுள்ளோம்.

கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தினோம்.

எங்களுக்குள் மறைந்திருக்கும் முழுத்திறமையையும் வெளிக்கொண்டு வந்தால் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

வெற்றி பெற முடியாது என்பதற்கு எந்தவொரு காரணமும் இருப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106