கல்வி அதிகாரிகள் சிலருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
Saturday, July 7th, 2018
கல்வித்துறை சார்ந்த சில உத்தியோகத்தர்கள் தமக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி பிள்ளைகளுக்கான கல்வி உரிமைகளை மீறுகின்றனர் என தேசிய கல்வி ஊழியர் சங்கம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டைத் தாக்கல் செய்துள்ளது.
சில உத்தியோகத்தர்கள் பாடசாலையை மூடுமாறு அதிபர்மாருக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள் என்று தேசிய கல்வி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டாமென ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்திருக்கிறார்கள். இதனை தாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரேமசிறி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்
Related posts:
சிங்கள மாணவர்கள் வராது போனால் என்ன செய்யமுடியும்! - பொலிஸ்மா அதிபர்!
இலங்கை - சீனா இடையேயான உறவை விரிவுபடுத்த விருப்பம் கொண்டுள்ளது சீனா! - சீன அதிபர் ஷி ஜின்பிங்!
ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் பங்கேற்பதற்காக இலங்கை குழு ஒன்றை நியமிக்கவில்லை - அமைச்சர் கெஹலிய...
|
|
|


