துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி மரணம்!
Tuesday, July 3rd, 2018
பொலிஸ் அதிகாரி ஒருவர் யாழ். மல்லாகம் பகுதியில் இன்று பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு காரணமாக உயிரிழந்துள்ளார்.
தற்கொலை செய்யும் நோக்கிலேயே அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் அதிகாரி கடமையிலிருந்த போதே இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் திருகோணமலையை சேர்ந்த நஸீர் (25 வயது) என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
அரச சேவை ஆட்சேர்ப்பிற்கான வயதெல்லை 45 ஆக அதிகரிப்பு?
மீண்டும் வாகனங்களின் விலை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்!
நிறுவனமொன்றில் களவாடப்பட்ட நகைகள் - யாழ்ப்பாணத்தில் மேலும் இரண்டு யுவதிகள்கைது!
|
|
|
இலங்கையை இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தக்கூடிய விதத்தில் பயன்படுத்தலாம் என்ற கரிசனை க...
அதிகரித்த வெப்பநிலை - மார்ச் 01 வரை வெளிப்புற நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதைத் தவிருங்கள் - ...
வேட்பாளர்கள் கல்வித் தகைமைகளை வழங்குவது கட்டாயமாக்கப்பட வேண்டும் - தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் வல...


