வாகன வேகத்தைக் கட்டுப்படுத்த இலங்கையில் போக்குவரத்து டம்மி பொலிஸார்!
Monday, July 2nd, 2018
போக்குவரத்துச் சட்டங்களை மீறி வேகமாகப் பயணிக்கும் வாகனங்களின் வேகத்தைக் குறைக்கச் செய்வதற்குப் பொலிஸார் புதிய உத்தி ஒன்றைக் கையாளத் தொடங்கியுள்ளனர்.
புத்தளம் – முந்தல் பொலிஸ் பிரிவில் உள்ள நெடுஞ்சாலையில் பொலிஸ் அதிகாரிகளைப் போன்ற உருவப் பதாதைகள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன.
புத்தளம் பொலிஸ் பொறுப்பதிகாரியின் உத்தரவிற்கமைய புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் கிரியன் கல்லியில் இருந்து கரிக்கட்டி வரையான வீதியில் இவ்வாறு பொலிஸ் அதிகாரிகளைப் போன்ற உருவப் பதாகை பொருத்தப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதனை பார்த்தால் வேகத்தைச் சோதிக்கும் கருவியை ஏந்தியபடி வீதியை நோட்டமிட்டுக்கொண்டு பொலிஸ் அதிகாரிகள் நிற்பது போன்று தோன்றுவதனால் வாகனங்களின் வேகம் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
பிறப்பு, இறப்பு ,விவாக சான்றிதழ்களை எந்தவொரு பிரதேச செயலகத்திலிருந்தும் உடனடியாகப் பெற்றுக்கொள்ள முட...
இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் - பிரதமர் மஹிந்தவிடம் ...
தாதியர் பயிற்சிக்காக 3 ஆயிரத்து 315 மாணவர்கள் இணைத்துக் கொள்ள திட்டம் - சுகாதார அமைச்சு தெரிவிப்பு!
|
|
|
வெறுக்கத்தக்க செயற்பாடுகளை எதிர்த்து போராடுவதே ஊழலை தோற்கடிப்பதற்கான சிறந்த ஆயுதம் - சர்வதேச ஊழல் ஒழ...
மூன்றாவது டோஸ் தேவையெனின் அதனை வழங்க இலங்கை தயார் - விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவிப்பு!
பாதுகாப்பற்ற சிறுவர்களின் விபரங்களை சேகரிக்க புதிய தரவுத்தளம் - சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவிப...


